யோகா செய்வது எப்படி?

  Author: Unknown Genre: »
  Rating

  பத்மாசனம்  நிமிர்ந்து சம்மணமிட்டு உட்கார்ந்து இடது காலை வலது தொடையின்

  மீதும், வலது காலை இடது தொடையின் மீதும் வைத்து நேரகாநிமிர்ந்து

  உட்காரவும்.நம் பாதங்கள் மேல்புறத்தில் பார்த்தது போல இருக்க

  வேண்டும். குண்டாக இருப்பவர்களுக்கு சற்று சிரமமாக இருக்கும். இது

  பழக பழக சரியாகிவிடும்.  பயன்கள் : இடுப்பு பலப்படும், உடலில் ரத்தம் நன்கு சுத்திகரிக்க படும், கூன்

  முதுகு சாரியாகும், உடலில் சுறுசுறுப்பு உண்டாகும்.


  தணுராசனம்
  குப்புற படுத்துக்கொண்டு இரண்டு கால்களையும் முழங்காலுக்கு மேலுள்ள பகுதியை இரண்டு கைகளை பின்னே நீட்டி பிடித்து மூச்சை பிடித்து உங்கள் தலையை மேலே தூக்கி நேராக பார்க்கவும். இப்பொழுது நிதானமாக மூச்சு விடவும். இதே போல் ஐந்து அல்லது ஆறு முறை இந்த பயிற்சியை செய்யலாம்.
  பயன்கள் : நம் வயிற்றில் உள்ள வேதிபொருலான அட்ரினல்,தைராய்டு, பிட்யுட்டரி போன்ற சுரப்பிகளை சரிவர இயங்க செய்கிறது. வயிற்றின் கோளாறுகளை நீக்குகிறது, உடலுக்கு சுறுசுறுப்பு அளிக்கிறது.

  சிரசாசனம்


  தரையில் ஒரு போர்வையை விரித்து தலையை கீழே வைத்து

  கைகளை ஆதரவாக வைத்து கொண்டு அப்படியே உங்கள் காலை

  மேலே தூக்க வேண்டும். சரியாக 90 டிகிரி கோணத்தில் தலைகீழாக

  நிற்க வேண்டும். குறைந்தது ஒரு நிமிடம் இதே நிலையில் இருக்கவும்.

  இந்த ஆசனத்தை இருதய சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் ரத்த

  அழுத்தம் உள்ளவர்கள் உள்ளவர் கணிப்பாக செய்ய கூடாது.
  பயன்கள்: தினமும் இதனை செய்வதால் நம் மூளைக்கு செல்லும் ரத்த

  ஓட்டத்தினை அதிகரிக்கும், மூளை சுறுசுறுப்பாகும்.

  வஜ்ராசனம்    இரு கால்களை பின்புறமாக மடக்கி உட்கார்ந்து நம் பின்புறங்கள் இரு

  கால்களின் மேல் இருக்க வேண்டும். இதே நிலையில் 15 நிமிடம்

  இருக்கவும்.

  பயன்கள்: வயிற்றில் உள்ள கோளாறுகள், அஜீரணம் குணமாகுதல் , முது

  முதுகு தண்டுவடம் வலுப்பெறும்.
  விபரீதகரணி  நேராக படுத்துகால்கள் இரண்டையும் 90 டிகிரிக்கு மேலே தூக்க

  வேண்டும், மேலே தூக்கும் போதே மூச்சை இழுத்து விட்டு கொண்டே

  இரண்டு கைகளை பக்கவாட்டில் இறுகப் பிடித்து கொள்ள வேண்டும்.

  பயன்கள்: இந்த ஆசனம் செய்வதனால் இடுப்பு,வயிறு,பின்புறச் சதைகள் ஆகியன குறைந்து அழகாகத் தோற்றமளிக்கும்.


  புஜங்காசனம்  தரையில் குப்புற படுத்து கொண்டு இரண்டு கைகளையும் உங்கள்

  காதுகளுக்கு நேராக நிறுத்தி உங்களுடைய தலையை மட்டும்

  தூக்கவும். உங்களுடையை வயிற்று பகுதியை தூக்க கூடாது.
  பயன்கள்: இந்த ஆசனம் செய்வதனால் வயிற்று பகுதியில் உள்ள
      சதைகள் நீங்கும், ரத்த ஓட்டம் அதிகரிக்கும், முதுகு தண்டுவடத்தில் உள்ள வலி நீங்கும்.


  பச்சிமோத்தாசனம்  இரு கால்களை நீட்டி நேராக உட்காரவும். இரு கைகளும் மேலே

  உயர்த்தி மெதுவாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டே

  கைவிரல்களால் கால் பாதத்தையோ அல்லது கட்ட விரலையோ

  பிடித்து கொள்ளவேண்டும். கால்களை மடக்க கூடாது. இந்த நிலையில்

  3 முதல் 5 நிமிடங்கள் வரை இருங்கள்.
  பயன்கள்: தொப்பை குறைய நல்ல வழி இது, இடுப்பு பகுதியில் இருக்கும் தசைகள் குறையும்.

  நன்றி : விக்கிபீடியா, கூகுள்

  Leave a Reply

  Blogger templates

  Blogger news

  Blogroll