எனக்கேன் வம்பு...!



    ஒரு கரை வேட்டி கூறியது..
    இவன் பிற்படுத்தப்பட்டோன்..
    அவன் முற்படுத்தப்பட்டோன்..

    நான் கேட்டேன்..
    எதிலிருந்து முற்படுத்தப்பட்டோன் ?
    எதிலிருந்து பிற்படுத்தப்பட்டடோன் ??

    கொஞ்சம் மௌனத்திற்குப்பின் கேட்டது…
    நீயும் அவர்களில் ஒருவன்தானே ?..
    எனக்கு அதன் அர்த்தம் விளங்கவில்லை..

    சிறிது நேரத்திற்குப்பின் புரிந்தது..
    கடந்த நூற்றாண்டில்
    முற்படுத்தப்பட்டோரிடம் கேள்விகள் கேட்டதினால்
    என் மூதாதையர் முற்படுத்தப்பட்டு
    பிற்படுத்தப்பட்டோர் ஆயினர்…

    ஆனால் இந்த நூற்றாண்டில்
    கேள்விகள் கேட்டால்
    பிற்படுத்தப்பட்டு
    முற்படுத்தப்பட்டோன் ஆகிவிடுவேனோ
    என்ற பயம்…!

    எனக்கேன் வம்பு..?!
    அடுத்த நூற்றாண்டில் முற்படுத்தப்பட்டோர்
    பிற்படுத்தப்பட்டோரானவுடன்
    முற்படுத்தப்பட்டோனாய் இந்த
    கேள்வியை கேட்டுக்கொள்கிறேன்…!

    குழப்புகிறதா..!?
    எதற்கு இந்த குழப்பம்…??
    முற்படுத்தப்பட்டவனும் இல்லை
    பிற்படுத்தப்பட்டவனும் இல்லை
    எல்லோரும் மனிதர்கள்
    என்று ஒத்துக்கொள்ளுங்கள்,
    இந்த கவிதை பயனற்று
    பயனுள்ளதாகி விடும்..!

    Leave a Reply

    Blogger templates

    Blogger news

    Blogroll